வேன் உரிமையாளர் மீண்டும் கைது
தலைவாசல் அருகே சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் வேன் உரிமையாளர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
தலைவாசல்
தலைவாசலை அடுத்த வீரகனூர் அருகே உள்ள ராயர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 31). இவர் கடந்த 2020-ம் ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்போது வீரகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில வழக்கை துரிதப்படுத்துவதற்காக போக்சோ கோர்ட்டு நீதிபதி உத்தரவின்பேரில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் செல்வத்தை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.