பெரியகுளம் அருகே மஞ்சளாற்றில் மணல் அள்ளியவர் கைது
பெரியகுளம் அருகே மஞ்சளாற்றில் மணல் அள்ளியவர் கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம் மண்டல துணை தாசில்தார் ராஜாராம் மற்றும் அதிகாரிகள் கெங்குவார்பட்டியில் மணல் கடத்தல் தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்தவரை நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில் அவர், அதே ஊரை சேர்ந்த ரங்கராஜ் (வயது 45) என்பதும், மஞ்சளாற்றில் இருந்து மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரையும், மாட்டு வண்டியையும் அதிகாரிகள் பிடித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கராஜை கைது செய்தனர்.