சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது
அஞ்செட்டி அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள அட்டப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சக்திவேல் (வயது24), மெய்யழகன் (51). இவர்கள் 2 பேரும் சாராயம் காய்ச்சுவதாக அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அட்டப்பள்ளம் கிராமத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் வீடு மற்றும் தோட்டத்தில் ஊறல் போட்டு சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சாராயம் மற்றும் ஊறலை ேபாலீசார் அழித்தனர்.