கஞ்சா, குட்கா விற்ற 8 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பணம் வைத்து சூதாடியதாக 4 பேரும் சிக்கினர்.

Update: 2023-05-15 16:39 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பணம் வைத்து சூதாடியதாக 4 பேரும் சிக்கினர்.

தீவிர ரோந்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க ேபாலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் கஞ்சா வைத்திருந்த காட்டிநாயனப்பள்ளி 18 வயது வாலிபர், பாரண்டப்பள்ளி புதூர் கார்த்திகேயன் (வயது30), ராசுவீதி யுவராஜ் (45), பேரிகை விஸ்வநாதன் (36), சூளகிரி ஏனுசோனை சாக்கப்பா (50), பெல்லாரம்பள்ளி தனுஷ் (22), ஓசூர் தின்னூர் சரண் (23) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல அரசம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கடையில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட குட்கா விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக அரசம்பட்டியை சேர்ந்த வடிவேல் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சூதாட்டம்

ஓசூர் மூக்கண்டப்பள்ளி என்.டி.ஆர். நகரில் பணம் வைத்து சூதாடியதாக அன்னை சத்யா நகர் ரவி (43), என்.டி.ஆர். நகர் பிரகாஷ் (44), தேசிங் நகர் சிவகுமார் (41), நாகராஜ் (46) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்