பொதுமக்களுக்கு இடையூறு; 2 பேர் கைது

மோகனூர் பொதுமக்களுக்கு இடையூறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-29 18:45 GMT

மோகனூர்

மோகனூர் காவிரி ஆற்றங்கரை பகுதியில் மோகனூர் சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கை சாமி மற்றும் போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 பேர் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். போலீசாா் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மருத தாண்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் குமார் (வயது 22), மோகனூர் மேட்டு தெருவை சேர்ந்த தமிழ்வாணன் மகன் பூபதி (20) என்பதும், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்