தேனி அருகே ஜவுளி கடையில் திருடிய வாலிபர் கைது

தேனி அருகே ஜவுளி கடையில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-25 21:00 GMT

தேனி அருகே நாகலாபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 33). இவர் தேனி புதிய பஸ் நிலையம் அருகில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று அவர் தனது கடையில் ஊழியர்களுடன் சுத்தம் செய்து கொண்டிருந்த போது மாடியில் சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது ஏ.சி. எந்திரத்தில் இருந்து செம்பு குழாய்களை ஒரு வாலிபர் திருடிக்கொண்டிருந்தார்.

கருப்பசாமியை பார்த்தவுடன் அந்த வாலிபர் செம்பு குழாய்களுடன் தப்பி ஓடினார். கருப்பசாமியும், ஊழியர்களும் அவரை துரத்திச் சென்று பிடித்து, தேனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செம்பு குழாய்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் உத்தமபாளையம் அருகே செல்வநாயகபுரத்தை சேர்ந்த பாண்டி மகன் பொன்ராஜ் (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்ராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்