நூலகத்திற்கு வந்த மாணவிகளை கேலி செய்த வாலிபர் கைது

சேலத்தில் நூலகத்திற்கு வந்த மாணவிகளை கேலி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-02 19:58 GMT

சேலம் கிச்சிப்பாளையம் காந்திமகான் தெருவை சேர்ந்த சரத்குமார் (வயது 28). இவர், அரசு கல்லூரியில் எம்.ஏ. படித்துள்ளார். இவர், மாவட்ட நூலகத்துக்கு அடிக்கடி வந்து செல்வாராம். அப்போது அங்குள்ள மாணவிகளிடம், ஏய் செல்லக்குட்டி நல்லா இருக்கியா... என்று கூறி கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர், மாணவிகளை கேலி செய்யும் வீடியோவும் வைரலாகி வருவதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்