திண்டுக்கல் அருகே சூதாடிய 9 பேர் கைது

திண்டுக்கல் அருகே சூதாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-27 20:45 GMT

திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் மற்றும் போலீசார் அனுமந்தராயன்கோட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 28), அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்த சந்திரன் (43), ஆல்பர்ட் வினோத் (37), விக்டர் (63), ஜேம்ஸ் (43), ஜேக்கப் ஜெரால்டு (29) உள்பட 9 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ1,000 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்