கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
சேலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம் ரெட்டியூர் குள்ளகவுண்டர் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). இவர், கடந்த மாதம் 4-ந் தேதி ரெட்டியூர் சிட்கோ பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தபோது போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து பொது சுகாதாரம் பாதிக்கும் வகையில் தினேஷ்குமார் நடந்து கொண்டதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அழகாபுரம் போலீசார் மாநகர கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நேற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.