லாரி டிரைவர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே விபத்தில் அக்காள்-தங்கை உள்பட 3 பேர் பலியானது தொடர்பாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-15 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள்கள் தமிழரசி (வயது 19), தமிழ்பிரியா (17) மற்றும் உறவினரான முனிராஜ் மகன் அம்பேத்வளவன் (14) ஆகிய 3 பேரும் மொபட்டில் தேன்கனிக்கோட்டையில் உள்ள வங்கிக்கு நேற்று முன்தினம் சென்றனர். சாப்பராணப்பள்ளி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் தமிழரசி, தமிழ்பிரியா, அம்பேத்வளவன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் யாரப் நகரை சேர்ந்த குமார் (48) என்பவரை கைது செய்தனர்.

இதனிடையே விபத்தில் இறந்த அக்காள், தங்கை உள்பட 3 பேரின் உடல்களையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் 3 பேரின் உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்