லாரிகளில் டீசல் திருடிய 3 டிரைவர்கள் கைது
கிருஷ்ணகிரியில் லாரிகளில் டீசல் திருடிய 3 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரியில் தனியார் எம்.சாண்ட் கிரஷர் இயங்கி வருகிறது. இதில் எம்.சி.பள்ளியை சேர்ந்த சரவணன் (வயது42), ராஜா (31), பில்லனக்குப்பம் அருள் (26) ஆகியோர் டிரைவர்களாக வேலை செய்து வந்தனர். இவர்கள் லாரிகளில் இருந்து 60 லிட்டர் டீசலை திருடினர். இதுகுறித்து கிரஷர் மேலாளர் கார்த்திக் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டீசல் திருடிய 3 டிரைவர்களையும் கைது செய்தனர்.