தொழிலாளி கொலையில் 2 பேர் கைது

பேரிகை அருகே தொழிலாளி கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-27 18:45 GMT

ஓசூர்

பேரிகை அருகே தொழிலாளி கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொழிலாளி கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவிற்குட்பட்ட புக்கசாகரம் அருகே உள்ள ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 25-ந் தேதி, அதே பகுதியை சேர்ந்த உறவினர் வெங்கடேசப்பா என்பவர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். இதனிடையே நேற்று முன்தினம் காலை, ராமச்சந்திரம் கிராமத்தில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இது குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்த அப்பைய்யா (65) என்பவர், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பென்சுபள்ளியை சேர்ந்த கோபால்ரெட்டி (45) என்பவருடன் சேர்ந்து கிருஷ்ணப்பாவை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

முன்விரோதம்

அப்போது நாராயணசாமி என்பவரது நிலத்தில் 4 ஆண்டுகளாக அப்பைய்யா காவலாளியாக வேலை செய்து வந்ததும். அங்கு அடிக்கடி சென்று சொட்டுநீர் பாசன குழாய்களை கிருஷ்ணப்பா திருடி சென்றதும் தெரிய வந்தது. இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கிருஷ்ணப்பாவை கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பேரிகை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்