குட்கா வைத்திருந்த 2 பேர் கைது
ஓசூரில் குட்கா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்
ஓசூர் சிப்காட் போலீசார், பேடரபள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ராஜாஜி நகர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு 7 கிலோ குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கடை உரிமையாளர் வெங்கடசாமி ரெட்டி (வயது 60) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் குட்காவை பறிமுதல் செய்தனர்.
ஓசூர் டவுன் போலீசார், ஓசூர் பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் பையில் குட்கா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அவா் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சங்கர் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.