டிரான்ஸ்பார்மரில் ஆயில் திருட முயன்ற 2 பேர் கைது

தளி அருகே டிரான்ஸ்பார்மரில் ஆயில் திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-11 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தளி அருகே சொல்லேபுரம் பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் சிலர் ஆயில் மற்றும் காப்பர் கம்பிகளை திருட முயன்றனர். இதுகுறித்து தளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கெலமங்கலம் ஜீபி பகுதியை சேர்ந்த தினகரன் (வயது 25), இவரது தம்பி செல்வராஜ் (22) ஆகியோர் என்பதும், டிரான்ஸ்பார்மரில் ஆயில் மற்றும் காப்பர் கம்பிகளை திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்