கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஓசூரில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-06 18:45 GMT

கிருஷ்ணகிரி மது விலக்கு அமல்பிரிவு போலீசார் வரமலை குண்டா சோதனைச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஞானமூர்த்தி (வயது28) என்பதும், கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் ஓசூர் மது விலக்கு அமல் பிரிவு போலீசார் சிப்பாய்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு நின்ற வாலிபரிடம் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்போக அதேபகுதியை சேர்ந்த முஜாகித் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். 2 பேரிடம் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்