போதைப்பொருட்கள் பயன்படுத்திய 3 பேர் கைது
ஓசூரில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்:
ஓசூரில் "மெதம்பேடமைன்" என்ற போதையூட்டும் கெமிக்கல் வஸ்து எனும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் முனீஸ்வர் நகர் பகுதியில் ஒரு வீட்டில் நேற்று மாலை திடீரென சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே சிப்பிலிபாறையை சேர்ந்த விபின் (வயது37), வெள்ளிபம்பை சேர்ந்த ஸ்ரீகந்தா (28), ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்த டேனியல் (28) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய போதைப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.