கஞ்சா விற்ற வாலிபர் கைது

கிருஷ்ணகிரி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-20 18:45 GMT

கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் அரசம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற நபரிடம் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் போச்சம்பள்ளி அருகே உள்ள விளங்காமுடியை சேர்ந்த பார்த்திபன் (வயது22) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்