கஞ்சா விற்றதாக 3 வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்றதாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-19 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது கஞ்சா விற்ற காவேரிப்பட்டணம் காந்தி நகர் காலனியை சேர்ந்த அர்னால்டு (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கந்திகுப்பம் போலீசார் ராயப்பனூர் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்ற போது அங்கு நின்ற நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் ராயப்பனூர் அரவிந்தன் (24) என்பதும் கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று ஓசூர் மது விலக்கு அமல் பிரிவு போலீசார் சானசந்திரம் பகுதியில் ரோந்து சென்றபோது கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் (23) என்பவரை கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்