குட்கா விற்ற 4 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-18 18:45 GMT

கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணகிரி வழியாக குட்கா மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார் ரோந்து சென்று கடைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடைகளில் குட்கா விற்றதாக சப்பாணிப்பட்டியை சேர்ந்த பார்வதி (வயது57), பேரிகை நரேஷ்பாபு (40), அகல்யா (45), அந்தேவனப்பள்ளி நாராயணன் (49) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்