கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

அஞ்செட்டி அருகே தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-13 18:45 GMT

அஞ்செட்டி அருகே தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே நூருந்துசாமி மலை கிராமத்தில் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் அஞ்செட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது அதேபகுதியை சேர்ந்த விவசாயி மது என்பவர் தோட்டத்தில் அவரை, துவரை செடிகளுக்கு நடுவே ஊடுபயிரிராக கஞ்சா பயிரிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா செடி அழிப்பு

தொடர்ந்து தோட்டத்தில் பயிரிட்டு இருந்த 6 கிலோ எடை கொண்ட கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து தீவைத்து அழித்தனர். மலைப்பகுதியில் கஞ்சா பயிரிடுவது, விற்பது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்