அரூர்:
அரூர் அருகே உள்ள கூடலூர் பகுதியில் அடிக்கடி ஆடுகள் திருட்டு போவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அரூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அரூரை சேர்ந்த சுரேந்திரன் (வயது36) என்பவருக்கு ஆடு திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அரூர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆடுகள் திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்திரனை கைது செய்தனர்.