திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
நல்லம்பள்ளி அருகே திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே கடந்த மாதம் ஊராட்சி மன்ற அலுவலகம், டீக்கடை, நகை அடகு கடை, காளியம்மன் கோவில் ஆகிய 4 இடங்களில் அடுத்தடுத்து பூட்டுகள் உடைக்கப்பட்டு, எல்.இ.டி. டி.வி., பணம், கோவில் உண்டியல் ஆகியவை திருட்டு போனது. இதுதொடர்பான புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, நல்லம்பள்ளி கோவில் தெருவை சேர்ந்த செரபாண்டராஜ் (வயது35), கார்த்திக் (34), நல்லம்பள்ளியை சேர்ந்த மாஸ்கோ (எ) சர்வான் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செரபாண்டராஜ் உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் இந்த திருட்டில் தொடர்புடைய மாஸ்கோவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த மாஸ்கோவை நேற்று போலீசார் கைது செய்தனர்.