மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
அரூர் அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரூர்:
அரூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த விவேக் (வயது 22) என்ற வாலிபர் சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அரூர் அருகே பதுங்கி இருந்த விவேக்கை போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர். மாணவியை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.