வடமதுரையில் போலீசாரை மிரட்டிய வாலிபர் கைது

வடமதுரையில் போலீசாரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-07 17:05 GMT

வடமதுரை அருகே உள்ள பிலாத்து மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இன்று இரவு இவர், வடமதுரை போலீஸ் நிலையம் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி ரேஸ் செய்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது, ரமேஷ் போலீசாரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்