ஸ்கூட்டரில் குட்கா கடத்திய வாலிபர் கைது

கிருஷ்ணகிரி வழியாக தர்மபுரிக்கு ஸ்கூட்டரில் 48 கிலோ குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-30 18:45 GMT

கிருஷ்ணகிரி வழியாக தர்மபுரிக்கு ஸ்கூட்டரில் 48 கிலோ குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

குட்கா கடத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சேலம் மெயின் ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒருவர் ஸ்கூட்டரில் வந்தார். போலீசார் அந்த ஸ்கூட்டரை நிறுத்தி அதில் இருந்த பையை சோதனை செய்தனர். ஸ்கூட்டரில் 48 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், பான்மசாலா, குட்கா உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.21 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக ஸ்கூட்டரில் வந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கைது-பறிமுதல்

அவர் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள மேல் குள்ளம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 23) என்பதும், பெங்களூருவில் இருந்து காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டிக்கு குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் குட்காவுடன் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்