திருச்செங்கோட்டில் வாலிபரிடம் செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
திருச்செங்கோட்டில் வாலிபரிடம் செல்போன், பணம் பறித்த 2 பேர் கைது
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு மண்டகபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 25). இவர் மோட்டார் சைக்கிளில் எட்டிமடைப்புதூர் கொசவம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் கார்த்தி சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் கார்த்தியை மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.600 ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து கார்த்தி திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் வாலிபரிடம் பணம் பறித்ததாக மலைசுத்தி ரோடு பகுதியை சேர்ந்த லாரி பட்டறை தொழிலாளி ராஜசேகர் (23) மற்றும் கோகுல கிருஷ்ணன் (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.