பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
தளியில் பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ஜவளகிரி மலை கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் இருந்த பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கடையில் குட்கா விற்பது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான ஜவளகிரியை சேர்ந்த நாகராஜ் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கடையில் இருந்து குட்காவை பறிமுதல் செய்தனர்.