ஊழியரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:
ஓசூர் அந்திவாடி பகுதியை சேர்ந்தவர் பரத் (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவர் ரிங் ரோடு முனீஸ்வர் நகர் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், பரத்தை கத்தி முனையில் மிரட்டி செல்போனை பறித்து சென்றார். இது குறித்து பரத் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது செல்போனை பறித்து சென்றது பெங்களூரு ஏலங்கா பகுதியை சேர்ந்த சீனிவாசா (19) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.