பள்ளிபாளையத்தில் சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

பள்ளிபாளையத்தில் சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

Update: 2022-10-17 19:07 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் ஆயக்காடு சத்யா நகர் கேசவன் தோட்டத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய சக்திவேல் (வயது 47), குமாரபாளையம் சந்திரசேகரன் (42), ஈரோடு முத்துராஜ் (33), சங்ககிரி கோபால் (53) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்