கூடலூர் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கூடலூர் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-21 17:34 GMT

கூடலூர் காஞ்சிமரத்துறை சாலை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கூடலூர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி தலைமையிலான போலீசார் நேற்று கூடலூர்-காஞ்சிமரத்துறை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பொது கழிப்பறை அருகே சந்தேகப்படும் வகையில் 3 பேர் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது போலீசார் வருவதை பார்த்த அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அதில், ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 2 பேர் சிக்கினர். விசாரணையில் அவர்கள், கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 31), தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ராஜா (27) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா மற்றும் ரூ.92 ஆயிரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கம்பத்தை சேர்ந்த ஜெயக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்