மது விற்ற 16 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் மது விற்ற 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அரூர் கோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி விற்ற 7 பேர் பென்னாகரத்தில் 2 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.