மது பதுக்கி விற்ற பெண் கைது
பாலக்கோடு அருகே மது பதுக்கி விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டியில் மீனா (வயது50) என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலானது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பாலக்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு சிந்து தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது மீனா மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மீனாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.