பெண்ணிடம் தாலி செயின் பறித்த வாலிபர் கைது

நல்லம்பள்ளி அருகே பெண்ணிடம் தாலி செயின் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-20 17:15 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அடுத்த புறவடையை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 45). மளிகை கடைக்காரர். இவர் கடந்த ஜூன் 13-ந் தேதி மளிகை கடையில் இருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஜெயலட்சுமி கழுத்தில் இருந்த 4 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஜெயலட்சுமியிடம் தாலி செயினை பறித்து சென்றது சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்த விஜய் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் தாலி செயின், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்