பொது இடங்களில் மது அருந்திய 15 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-30 17:16 GMT

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் பலர் மது அருந்துவதாகவும், இதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவுப்படி அந்தந்த பகுதி போலீசார் நேற்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது பொது இடங்களில் மது அருந்திய 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்