கஞ்சா வைத்திருந்தவர் கைது
கிருஷ்ணகிரியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் ராசுவீதி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் பெத்தம்பட்டியை சேர்ந்த அசோக் (வயது24) என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.