மக்னா யானையை சுட்டுக்கொன்ற 4 பேர் கைது

பென்னாகரம் வனப்பகுதியில் மக்னா யானையை சுட்டுக்கொன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-12 16:04 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வன சரகத்திற்கு உட்பட்ட பேவனூர் காப்புக்காடு பகுதியில் கடந்த 1-ந்தேதி ஒரு மக்னா யானை இறந்து கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து ஓசூர் கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்தார். அப்போது அந்த யானையை துப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக யானையை சுட்டுக் கொன்றவர்களை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது பென்னாகரம் அருகே உள்ள சின்னப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (வயது 37), கமலேசன் (44), சிவக்குமார் (27), கொட்ட தண்டுக்காடு கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (42) ஆகியோர் யானையை சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்