குட்கா விற்ற 3 பேர் கைது
தர்மபுரியில் குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை சிலர் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டவுன் போலீசார் கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள் அப்போது கிருஷ்ணமூர்த்தி (வயது 57), ஜெயமூர்த்தி (57), ஆத்துமேடு பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (40) ஆகிய 3 பேர் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 500 குட்கா பொட்டலங்கள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.