நல்லம்பள்ளி அருகே பஸ்சில் பயணியிடம் நகை திருடிய பெண் கைது

நல்லம்பள்ளி அருகே பஸ்சில் பயணியிடம் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-14 16:53 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி ராமசாமி முதலிதெருவை சேர்ந்தவர் கலா (வயது 62). அதேபகுதியை சேர்ந்தவர் சிவா. இவர்கள் 2 பேரும் தர்மபுரியில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு டவுன் பஸ்சில் வந்தனர். அப்போது 2 பெண்கள் கலா கையில் வைத்திருந்த நகை பையை நைசாக எடுத்துக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவரை அக்கம் பக்கத்தினர் பிடித்துவிட்டனர். மற்றொரு பெண் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட பாப்பாரப்பட்டி போலீசில் அவர்கள் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் செங்கம் அருகே உள்ள கட்டமடுவு பகுதியை சேர்ந்த பாரதி (32) என்பதும், தப்பியோடியவர் மீனா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பாரதியை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மீனாவை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்