தர்மபுரி பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

தர்மபுரி பகுதியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-08 17:18 GMT

தர்மபுரி:

தர்மபுரி பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பான புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி போலீசார் தர்மபுரி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூரை சேர்ந்த பிலிப்ஸ் (வயது 58) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர் தர்மபுரி பகுதியில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டவுன் போலீசார் பிலிப்சை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்