மது, புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
போடியில் மது, புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடி டவுன் போலீசார் நேற்று நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போடி குலாலர்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 46), பாண்டி (70) ஆகியோர் தங்களது பெட்டிக்கடைகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் போடியில், முந்தல் சாலையில் தண்டீஸ்வரன் (63) என்பவர் தனது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தண்டீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.