ஊத்தங்கரை
கல்லாவி அருகே பெரிய காமாட்சிப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுரங்கன். இவர் நேற்று முன்தினம் 35 வயது பெண் குளிக்க சென்றபோது திடீரென கழிவறைக்குள் புகுந்து சேலையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வருவதை அறிந்த பொன்னுரங்கன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுரங்கனை கைது செய்தனர். பொன்னுரங்கன் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.