போடியில் கஞ்சா வைத்திருந்த மூதாட்டி கைது

போடியில் கஞ்சா வைத்திருந்த மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-08 21:15 GMT

போடி டவுன் போலீசார் நேற்று நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போடி கீழத்தெருவில் உள்ள சுகாதார வளாகம் அருகில் சந்தேகப்படும் வகையில் மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி சரசுவதி (வயது 67) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரசுவதியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்