அன்னதானப்பட்டி
சேலம் தாதகாப்பட்டி, தாகூர் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவர் தாதகாப்பட்டி கேட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் மோகனை திடீரென வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.1,450 ஐ பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்டவர் மூணாங்கரடு அம்மாள் ஏரி ரோடு அம்மன் நகர் பகுதியை சேர்ந்த சாரதி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டன.