கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது

போடியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-26 21:00 GMT

போடி குலாலர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் கடந்த 24-ந்தேதி இரவு மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். போடி பழைய பஸ் நிலையம் அருகே அவர் வந்தபோது, வாலிபர் ஒருவர் வழிமறித்தார். மேலும் கத்தியை காட்டி, பணம் கேட்டு மிரட்டினார். இதனால் மணிகண்டன் சத்தம் போடவே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து மணிகண்டன் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டனிடம் பணம் பறிக்க முயன்ற வாலிபர் ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த லோகேஷ்குமார் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்