கம்பத்தில் லாட்டரி சீட்டுக்குள் விற்றவர் கைது
கம்பத்தில் லாட்டரி சீட்டுக்குள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கம்பம் ஏ.எம்.சர்ச் தெருவில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கம்பம் முகைதீன் ஆண்டவர்புரம் தெருவை சேர்ந்த சகுபர் சாதிக் (வயது 49) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 300 மற்றும் 85 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.