பெரியகுளத்தில் மது விற்ற 4 பேர் கைது
பெரியகுளத்தில் மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியகுளம் தென்கரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியகுளம் புதிய பஸ் நிலைய பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் வடகரையை சேர்ந்த பால்பாண்டி (வயது 49) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் வடுகப்பட்டியை சேர்ந்த தாமோதரன் (35), சின்னசாமி (46), தாமரைக்குளம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த நிதீஷ்குமார் (21) ஆகியோரும் மதுபானம் விற்றதாக கைது செய்யப்பட்டனர்.