மொரப்பூர் அருகேகஞ்சா விற்ற வாலிபர் கைது

Update: 2023-07-11 19:45 GMT

மொரப்பூர்

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் போலீசார் ஜி.மூக்கனூர்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகப்படும் படியாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அதேபகுதியை சேர்ந்த அகத்தியன் (வயது27) என்பதும், கஞ்சா விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்