சாணார்பட்டி அருகே சூதாடிய 7 பேர் கைது
சாணார்பட்டி அருகே சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூ.குரும்பபட்டி முத்தாலம்மன் கோவில் பின்புறம் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் அதே ஊரை சேர்ந்த ரத்தினகிரி (வயது 67), முத்துக்குமார் (45), ராமசாமி (70), ரவி (54), முருகேசன் (62), நொச்சிஓடைப்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி (60), ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்த சுப்பிரமணி (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம், சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.