போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

Update: 2023-08-16 22:01 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள ஓடத்துறை குமாரபாளையத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 62). இவர் கடந்த 25.5.2017 அன்று வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் தண்ணீர்பந்தல் புதூருக்கு சென்று கொண்டிருந்தார். பொம்மநாய்க்கன்பாளையம் கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் கோபாலின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கோபால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இதுகுறித்து கோபி போலீசார் விபத்தை ஏற்படுத்தியதாக ஓடத்துறை மேல்காலனியை சேர்ந்த அருண்குமார் (19) மீது கோபி முதலாம் வகுப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கோபி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி இருந்தார். தற்போது நாகலட்சுமி தர்மபுரி மாவட்டம் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் வழக்கில் சாட்சி விசாரணைக்கு நாகலட்சுமி ஆஜராகவில்லை என்று தெரிகிறது. அதையடுத்து கோபி முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு விஜய் அழகிரி, இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஆகஸ்டு 25-ந் தேதி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று பிடிவாரண்டு பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்