கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து குன்னூர் குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார்.
குன்னூர்
கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து குன்னூர் குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டார்.
ஆஜராகவில்லை
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ெகாலக்ெகாம்பை போலீஸ் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை போலீஸ் இன்ஸ்பெக்டராக சண்முகசுந்தரம் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் பணிபுரிந்த போது விபத்து, அடிதடி, வெடிமருந்து ஆகிய வழக்குகள் குன்னூர் குற்றவியல் கோர்ட்டில் விசாரணையில் இருந்து வந்தது.
மேற்கண்ட வழக்குகளில் சாட்சிகள் விசாரணை நிறைவு பெற்றது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திடம் விசாரணை நடத்த கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பபட்டது.
பிடிவாரண்டு
தற்போது சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் சண்முகசுந்தரம் குன்னூர் குற்றவியல் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து நீதிபதி இசக்கிமகேஷ்குமார் விசாரணைக்கு ஆஜராத போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
கடந்த 1-ந் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாத வெலிங்டன் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தங்கம் என்பவருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.